Tuesday 27 April, 2010

வள்ளலார் கண்ட வாழ்வியல் முறைகள்


பாத அணி பயன்பாடு

ஐய்யா வள்ளல் பெருமானார் வகுத்து தந்த வாழ்வியல் முறைகளில் முக்கியமானது சன்மார்க்கர்கள் வெளியில் செல்லும் போது அவசியம் பாத அணி அணிந்து செல்ல வேண்டும் என்பது...

ஐயா காலத்தில் மக்கள் அதிகம் பாத அணியை பயன்படுத்துவாரில்லை.. சுகாதாராமான வாழ்க்கைக்கு வள்ளல் பெருமானார் அவர்கள் காலத்திலேயே எவ்வளவு முயன்றிரிக்கிறார் என்று வள்ளலின் வாழ்வியல் முறைகளை பார்த்தாலே தெரியும்.

காலில் பாத அணி இல்லாமல் நாம் காலை கடன் கழிக்க நவீன கழிப்பிட வசதி இல்லாத காலத்தில் வயல் வெளிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்திய காலத்தில் (இன்றளவும் இந்த முறையை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்) பாத அணி இல்லாமல் நடந்து செல்லும்போது ஏற்க்கனவே கொக்கி புழுவினால் (HOOK WORM) பாதிக்கப்பட்டவர் கழித்த மலத்தில் இருந்து அது காய்ந்து போய் மண்ணாகி இருந்தாலும் கொக்கி புழுவானது (HOOK WORM) நமது மென்மையான பாதங்களில்

தனது கொக்கி போன்ற முன் பக்கத்தினால் தைத்து நமது உடலின் உள்ளே சென்று விடும் ...நம் மலத்திலிருந்து இன்னொருவருக்கு என்று, இன்று வியாபார உக்தியாக பயன்படுத்தப்படும் (MULTI LEVEL MARKETING) சங்கிலி தொடர் வியாபாரம் போன்று அனைவருக்கும் சுகாதார கேட்டை ஏற்படுத்திவிடும்.

இதை தடுக்கத்தான் ஐயா அவர்கள் வெளியில் செல்லும் பொது அவசியம் பாத அணி அணியுமாறு சன்மார்க்கர்களை கேட்டு கொண்டார்.