Friday 12 November, 2010

சாகா கல்வி

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஸ்ரீ வள்ளல் பெருமானார் சாகா கல்வியைப் பற்றி குறிப்பிடும் போது விது நெறி என்று குறிப்பிடுகிறார். விது -என்பது அமுத சந்திரனைக் குறிக்கும். ஆக்கினை சக்கரத்தில் வரும் உயிர் வித்தை அருந்தியவன் சாகா வித்தையை கற்றவன் ஆவான். இவ்வாறு ஆதாரந்தத்தில் பெறுகிற அமுதப் பானத்தை தவிர வேறு எதனாலும் சாகா கல்வியைப் பெற இயலாது என்பதை கீழ் வரும் பாடல் மூலம் வலியுறுத்துகிறார் வள்ளல் பெருமானார்.

மேலும் நான்கு வேதங்களும், ஆகமங்களும், சாத்திரங்களும் ஆரவார சந்தைப்படிப்பு என்றும் அதன் மூலம் சாகா கல்வியை பயில இயலாது என்றும் கூறுகிறார்.

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி
.

திருமந்திரத்திலும் விதுநெறி வருகிறது.

" வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை

வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை வித்தினில் வித்தை விதற வுணர்வரேல்
மத்தி லிருந்ததோர் மாங்கனி யாமே.

1909. ஏழாம் தந்திரம் திருமந்திரம்

விது + அற = விதற.
விது = அசைவாம் சலனம்.
மாங்கனி = சிவம்.


உலகியலில் நிலத்தில் வித்து போட்டால்தான் விளைச்சல் உண்டாகும். வித்து இடுவோருக்கே சிறப்புடைய அறிவு உண்டு. விந்து மாயையாம் தூமாயையிலிருந்து கருமுதலாம் விந்து உண்டாகும். அவ்விந்துவிலிருந்து கிட்டும் உயிர் வித்தை அசைவின்றி இருந்து உணர்ந்தால் தயிர் கடைய உதவும் மத்து போல விளங்கித் தோன்றும். அம்மத்தின் உள்ளே சிவம் (மாங்கனி) தோன்றும்..

இப்பாடல்களை புற நோக்கால் திருமந்திரத்தை எவ்வாறு திருவருட்பா வுடன் ஒப்பிடலாம் என்று கூறாதீர்.

அக நோக்கால் பாடல்களில் உள்ள கருத்தை பார்க்கும் போது இந்திரிய ஒழுக்கத்தின் அருமை புரிய வரும். எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல் பெருமானார் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கத்தைப் பற்றி மிக அருமையாக கூறியிருப்பதும் தெரிய வரும். மேலும் பிற உயிர்களின் மேல் அன்பு அதிகரிக்கும் போது பிற உயிர்களும் தாமும் ஒன்றாகிறது, இது மேலும் வலிமை அடையும் போது காமம் மறைகிறது.

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிர்

தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்

இடம் என நான் தெரிந்தேன்..

திருமந்திரமும் :

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவதாரும் அறிகிலார்

அன்பே சிவமாவதாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

எனவே தூய்மையான அன்பு பிரகாசிக்கும் போது தேகம் சுத்த , பிரணவ , ஞான தேகமாக மாறி சிவமாகிறது.

சிவமாக்கிக்கொண்டான் என்று ஊதூது சங்கே

சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே

நவநோக்களித்தான் என்று ஊதூது சங்கே

நான் அவன் ஆனேன்என்று ஊதூது சங்கே

ஆகவே கருணை-தயவு உள்ளம் கொண்டவர்களுக்கு இயற்கையாகவே அவர்கள் துரியம், துரியாதீதம், சிவ துரியம், குரு துரியம், பரதுரியம் என்பதை மிக எளிதாக அடைகிறார்கள். செயற்கையாக (அன்புரு இல்லாமல்) யோகவுணர்வை ஏற்படுத்தி (artificial) அதன் மூலம் யோகம் பயில்பவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ஞானகுரு வள்ளல்பெருமானை சரணடைந்து அவரருளால் அனைத்து நிலைகளையும் கடக்க முயற்சி செய்து, ஆக்கினையில் அருள் அமுதம் உண்டு, சாகா கல்வி பயில முயற்சி மேற்கொள்வோமாக!

தகவல் உதவி:

1. அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

***********

Wednesday 7 July, 2010

ஆறாம் திருமுறை அமுது

1. பரசிவ வணக்கம் ( 3269 )
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே

2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
( 3270 )
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்


Friday 28 May, 2010

சன்மார்க்க நூல் வெளி



நம் நாட்டில் சமயஞ்சார்ந்த நூல்கள் வெளிவருவது மிகவும் அரிதாகும். அப்படியே ஒரு நூல் வந்தாலும்கூட, அது பெரும்பாலும் தமிழர்களின் மண்டைக்குள் மதப் பித்தை புகுத்துவதாகவும்; மூட நம்பிக்கையை விதைப்பதாகவும்; அறிவுக்குப் பொறுந்தா சடங்குகளை வளர்ப்பதாகவும்; ஆன்மிகத்திற்கு எதிரான உணர்ச்சிகளை ஊட்டுவதாகவும்; புதுப்புது கடவுளர்களையும் பூசைகளையும் பரிகாரங்களையும் விளம்பரம் செய்வதாகவும் அமைந்திருக்கும் என்பது வருத்தத்திற்குரிய உண்மையாகும்.
இதற்கு முற்றிலும் மாறாக, உண்மை சமயநெறியை அறிமுகப்படுத்தி, ஆன்மிக வழியில் வாழ்வை அமைத்துக்கொள்ள வழிகாட்டும் வகையில் மலேசியாவில் வந்திருக்கிறது ஒரு சிறிய நூல்; ஆனால், அரிய நூல்.
“வள்ளலார் கண்ட சமயநெறி” என்பது நூலின் பெயர். இதன் ஆசிரியர் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனார். இவர் மிக இளமையிலேயே மெய்யறிவு சார்ந்த இறைமை ஈடுபாடும், பகுத்தறிவுச் சிந்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர். திருவள்ளுவருக்குப் பிறகு, சித்தர் பெருமக்களுக்குப் பிறகு தமிழரின் சமயக் கொள்கையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வள்ளற் பெருமான் இராமலிங்க சுவாமிகள். அதனாலேயே இவரைப் புரட்சித் துறவி என்றும் கூறுவர். வள்ளலார் மீது நூலாசிரியருக்கு இருந்த ஆழ்ந்த பற்றுதலே இந்நூல் உருவாகுவதற்கு காரணியாகும் எனலாம்.
தாம் வாழ்ந்த காலத்திலேயே, தமிழர் கண்ட மெய்ந்நெறி சமயத் தெளிவினை இன்றைய தமிழர்க்கு ஏற்படுத்திவிட வேண்டும் என்ற பேராவலால், தமிழர்ச் சமயக் கோட்பாடுகளை ஆராய்ந்து வெளிப்படுத்த முற்பட்டார் பாவலர் ஐயா. அதற்காகவே, ‘தமிழர் சமயம்’ எனும் அரிய நூலினை எழுதி இதுவரை எவருமே தெளிவுபடுத்தாத பல உண்மைகளை வெளிப்படுத்த முற்பட்டார்.
அதற்கு முன்பதாக, வள்ளலார் கண்ட சமயநெறி, திருமூலர் கண்ட சமயநெறி, சித்தர் கண்ட சமயநெறி எனும் தலைப்புகளில் எழுதினார். அவற்றுள் ஒன்றுதான் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது.
‘ஆரியப் பார்ப்பன’ மேலாண்மையால் தமிழினம் சீரழிந்தது எனும் பெரியாரியல் உணர்வோடு முழு உடன்பாடு உடையவர் பாவலர். இருப்பினும், பார்ப்பன கொடும் பிடியிலிருந்து தமிழினத்தை விடுவித்து, அவ்விடுதலையை நிலைப்படுத்த தக்க வழிமுறைகளை காணவேண்டும் என்று சிந்தித்தார்.
திருமூலரின் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ எனும் கோட்பாட்டைப் பெயரளவில் அல்லாமல், ஆழமாக ஆய்ந்து தமிழர் கண்ட மெய்யறிவியலை வெளிப்படுத்த முயன்றார்.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ஆரியப் பார்ப்பனக் கோட்பாட்டை அடித்து நொறுக்கும் வள்ளலாரின் சிந்தனைகளை ஆராய்ந்து பல உண்மைகளை இந்த நூலில் வெளிப்படையாக எழுதி உள்ளார்.
நூலின் தொடக்கத்திலேயே ‘சமயமும் மதமும்’ ஒன்றல்ல என்பதை உணர்த்தும் வகையில், அறிவின் இயல்புகளையும் உணர்வின் இயல்புகளையும் நுட்பமாக விளக்கியுள்ளார். தொடர்ந்து,
*வள்ளுவர் நெறியில் வள்ளலார்*வள்ளலார் கண்ட அருள்நெறியும் மருள் நெறியும்*இந்து பெயர் வரலாறும் – இந்து மதமும்*இந்து மதம் மக்களின் பொது மதமாக இருக்கத் தகுதியற்றது*நாத்திகம் எது?*சாதியும் குறியீடுகளும்-அறிவு மதம் அல்லது மெய்யறிஞர் சமயம்*சவகர்லால் நேருவும் இந்து மதமும்*ஒளி வழிபாடே உண்மை வழிபாடு
ஆகிய தலைப்புகளில் அரிய கருத்துகளை நுட்பமாக விளக்கியுள்ளார். அறிவு தேடலோடு படிப்போருக்கு பல உண்மைகள் புரியும் வகையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்நூலை ஆழ்ந்து கற்பதன் வழியாக, தமிழரை மயக்கிய நெறி எது? தமிழர் பின்பற்ற வேண்டிய நெறி எது? என்பதைத் தெளிவாக உணரலாம்.
இந்த நூலினை வெளிப்படுத்துவதன் வழியாக, தமிழரிடையே ஊறிக்கிடக்கும் மதமயக்கு நீங்க வழிபிறக்கும் என நம்பலாம். மதவெறியர் சிலருக்கு இந்நூல் அதிர்ச்சியூட்டலாம். அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள் என்பதற்காக உண்மைகளை உரைக்காமல் இருக்க முடியாது.
தமிழரின் வீழ்ச்சிக்கு மதப்பித்து மிகப்பெரிய கரணியமாகும். இதிலிருந்து தமிழனை விடுவிக்க, தமிழும், தமிழின உணர்வும், திருக்குறள் நெறியுமே மிகச் சரியான கருவிகளாக அமையும். இந்த அடிப்படை உண்மையை உள்ளார்ந்து உணர்த்தும் வள்ளலாரின் உண்மை உள்ளத்தைத் தமிழர்க்குத் தெரிவிப்பதே இந்நூலின் நோக்கமாக இருக்கிறது.
நூலின் விலை: பத்து நிங்கிட் மட்டுமே (RM10.00)நூல் கிடைக்குமிடம்: மலேசியத் தமிழ்நெறிக் கழகம், Lot.274, Kpg. Bendahara Baru, Jalan Sungai Tua, 68100 Batu Caves, Selangor.
இரா.திருமாவளவன் Tel: 016-3262479

Tuesday 18 May, 2010

அருட்பா அமுது



அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எப்போது நம்மில் தோன்றுவார்?

Thursday 13 May, 2010




வள்ளலார் வகுத்த தந்த வாழ்வியல் முறைகள்
மூலிகை பயன்பாடு
கரிசாலங்கண்ணி :
1.மஞ்சள் கரிசாலங்கண்ணி
2.வெள்ளை கரிசாலங்கண்ணி

கரிசாலங்கண்ணியின் பயன்கள் : ( அகத்தியர் குண பாடத்தில் இருந்து ..)
தொண்டையில் ஏற்படும் நோய்கள்,
காமாலை ,
குஷ்டம்,
ரத்த சோகை ,
வயிறு ஊதிப்போதல் ,
போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது.

கரிசாலங்கண்ணியின் தன்மை :
பித்த நீர் பெருக்கி
உரமாகி (Tonic)
உடல் தேற்றி (Alternative)
வாந்தி உண்டாக்கி
வீக்கம் உருக்கி
ஈரல் தேற்றி

கல்லீரலை பாதுகாக்க கூடிய குணத்தால் மஞ்சள் காமாலை , ரத்த சோகை போன்ற நோய்களுக்கு
பயன்படுத்த படுகின்றது.
இரும்பு சத்து அதிகமாக உள்ள மூலிகை.
ரத்தத்தை தூய்மையாக்கும் மூலிகை.
ரத்தத்தையும் அதிகப் படுத்தும் மூலிகை.

வள்ளலார் , இந்த மூலிகையை தினமும் பயன் படுத்தும் படி அறிவுறுத்துகிறார்கள்

Tuesday 11 May, 2010


தோழர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...

இன்றைய நாள்: திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆண்டு, சித்திரை 25 ,செவ்வாய்க்கிழமை

இன்றைய குறள்:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
விளக்கம்:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.
அதிகாரம் : அறத்துப்பால் - இல்லறவியல் - இல்வாழ்

EnglishTranslation:
Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs.

Explanation: His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

Tuesday 27 April, 2010

வள்ளலார் கண்ட வாழ்வியல் முறைகள்


பாத அணி பயன்பாடு

ஐய்யா வள்ளல் பெருமானார் வகுத்து தந்த வாழ்வியல் முறைகளில் முக்கியமானது சன்மார்க்கர்கள் வெளியில் செல்லும் போது அவசியம் பாத அணி அணிந்து செல்ல வேண்டும் என்பது...

ஐயா காலத்தில் மக்கள் அதிகம் பாத அணியை பயன்படுத்துவாரில்லை.. சுகாதாராமான வாழ்க்கைக்கு வள்ளல் பெருமானார் அவர்கள் காலத்திலேயே எவ்வளவு முயன்றிரிக்கிறார் என்று வள்ளலின் வாழ்வியல் முறைகளை பார்த்தாலே தெரியும்.

காலில் பாத அணி இல்லாமல் நாம் காலை கடன் கழிக்க நவீன கழிப்பிட வசதி இல்லாத காலத்தில் வயல் வெளிகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்திய காலத்தில் (இன்றளவும் இந்த முறையை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள்) பாத அணி இல்லாமல் நடந்து செல்லும்போது ஏற்க்கனவே கொக்கி புழுவினால் (HOOK WORM) பாதிக்கப்பட்டவர் கழித்த மலத்தில் இருந்து அது காய்ந்து போய் மண்ணாகி இருந்தாலும் கொக்கி புழுவானது (HOOK WORM) நமது மென்மையான பாதங்களில்

தனது கொக்கி போன்ற முன் பக்கத்தினால் தைத்து நமது உடலின் உள்ளே சென்று விடும் ...நம் மலத்திலிருந்து இன்னொருவருக்கு என்று, இன்று வியாபார உக்தியாக பயன்படுத்தப்படும் (MULTI LEVEL MARKETING) சங்கிலி தொடர் வியாபாரம் போன்று அனைவருக்கும் சுகாதார கேட்டை ஏற்படுத்திவிடும்.

இதை தடுக்கத்தான் ஐயா அவர்கள் வெளியில் செல்லும் பொது அவசியம் பாத அணி அணியுமாறு சன்மார்க்கர்களை கேட்டு கொண்டார்.


Monday 15 February, 2010


வள்ளல் வகுத்து தந்த வாழ்வியல் முறைகள்
வெந்நீர் பயன்பாடு
வள்ளலாரின் வாழ்வியல் முறைகளில் முக்கியமானது சன்மார்கர்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரை பயன்படுத்த சொன்னது ...
இன்று உலகில் ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று, ஆகாயம் என்று நான்கு பூதங்களும் மனிதர்களால் மாசுபடுதப்பட்டுள்ளது..மாசுபடுத்த முடியாத ஒரே பூதம் நெருப்பு மட்டுமே..நிலம், காற்று, ஆகாயம், ஆகியவற்றில் எது ஒன்று மாசு அடைந்தாலும் முதலில் கெடுவது நீர் மட்டுமே..அதனால் தான் உலகில் எழுபத்தைந்து சதவிகிதம் நோய்கள் (Water Borne Disease )தண்ணீரால் பரவுகிறது .நிலம்,நீர், காற்று,ஆகாயம் ,ஆகிவற்றின் அசுத்தங்களை சுத்தபடுத்தக்குடிய ஒரே சக்தி நெருப்புக்கு மட்டுமே உண்டு.. குறிப்பிட்ட அளவு வெப்ப நிலைக்கு மேல் நன்றாக கொதிக்க வைக்கப்பட்ட நீரில் எல்லா நோய் கிருமிகளும் அழிந்து விடுவதால் நாம் அதை குடிநீராக பயன்படுத்தும்போது நோய் தொற்று வராமல் நம்மை காத்து கொள்ள முடிகிறது.

வெந்நீர்குளியல்
வெந்நீரில் குளித்தால் நமது தேகத்திற்கு ஐம்பூதங்களையும் கட்டுபடுத்தக்கூடிய ஆற்றல் வந்து விடுகிறது.உதாரனத்திற்க்கு காம இச்சை உணர்வுகளில் இருந்து நம்மை காத்து கொள்ளகூடிய சக்தி வெந்நீர் குளியலுக்கு உண்டு.கருத்தடை சாதனங்கள் வருவதற்கு முன்னர் நைஜீரிய
நாட்டு ஆண்களும் , பெண்களும் உடலுறவிற்கு முன்னால்வெந்நீர் தொட்டியில் குளித்துவிட்டு பிறகு உடலுறவு கொள்வார்கள்இதை ஒரு சிறந்த கருத்தடை முறையாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்கின்றன.சாதாரண மனித உடல் சூடிற்கே நமது உயிரணுக்கள் இறந்து விடும் என்பதால் தான் இயற்கை நமது மனித உடலில் விந்துபையை மட்டும் தனியாக தொங்க விட்டு இருக்கிறது.ஆகையால் யாராவது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெந்நீரில் குளிக்காமல் இருப்பது
விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வழி வகை செய்யும்.உயிரணுக்களின் செயல்பாட்டை கட்டு படுத்துவதன் மூலம் காம உணர்வுகளை கட்டுபடுத்துவதால் வெந்நீர் குளியல் பெண்களால் வரும் பல பிரச்னைகளில் இருந்து நம்மை விடுவிக்கின்றது.வள்ளலின் வாழ்வியல் முறைகளில் அடுதவற்றை தொடர்ந்து இதே தலைப்பில் காண்போம்.

ஆறாம் திருமுறை அமுது

நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி

நாட்டிய தோர் கோதாந்த பதிகள் பல கோடி

வல்லார் சொல்கலாந்த நிலை பதிகள் பல கோடி

வழுத்தும் ஓர் நாதாந்த பதிகள் பல கோடி

இல்லாத வேதாந்த பதிகள் பல கோடி

இலங்கு கின்ற சித்தாந்த பதிகள் பல கோடி

எல்லாம் பேர் அருட்ஜோதி தனிச்செங்கோல் நடத்தும் என் அரசே

என் மாலை இனிது புனைந்தருளே!

Wednesday 6 January, 2010

சன்மார்க்க இளைஞர்கள் எழுச்சி மாநாடு -உளுந்துர்பேட்டை

எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏற்று
சன்மார்கர்களுக்கு எதற்கு மாநாடு ?
அருட்பெரும்ஜோதி ஆண்டவராகிய வள்ளலார் அவர்களின் அடிப்படை கருத்துக்களை இன்று உலகம் முழுவதும் ஏற்று கொண்டிருக்கும் நிலையில் நம் தமிழகத்தில் அதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, வள்ளல் பெருமானாரின் வாழ்வியல் கருத்துக்களை இளைஞர்களிடம் (இன்றய முக்கியமான தேவை) கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை மகிழிச்சியோடு தெரிவிக்கிறோம் ....

உளுந்தூர் பேட்டையில் நடைபெற்ற சன்மார்க்க இளைஞர்கள் எழுச்சி மாநாட்டு பத்திரிக்கை



உலகு கட்டி ஆளும் சன்மார்க்க அருள் ஜோதி கோடியை திருவாளர் ர. அழகாநந்தன் (விழா தலைமை )ஏற்றி வைக்க மாநாடு இனிதே துவங்குகிறது...









மாநாட்டு மேடையில் அருளுரை வழங்கிய தயவு திருவாளர்கள் ஸ்ரீமத் அனந்தானந்த மகராஜ் சுவாமிகள்.,நிறுவனர் , ஸ்ரீ சராதா ஆஸ்ரமம், சிறப்பு சொற்பொழிவாற்றிய சாதுசிவராமன் அவர்கள்., மற்றும் விழா தலைமையேற்ற திரு அழகானந்தம் அவர்கள்....









மாநாட்டு திடலில் திரண்டிருந்த சன்மார்க்கிகள் கூட்டம்











செவிக்கு உணவளித்த சன்மார்க்க சாதுக்கள்